Karththarin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா - Christking - Lyrics

    Karththarin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா


    கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
    கர்த்தரின் பந்தியில் வா
    கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
    காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி
    — கர்த்தரின்

    1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின்
    திருச் சரீரம அல்லோ?
    பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப்
    பகிரப்பட்ட தல்லோ?
    தேவ குமாரனாம் ஜீவ அப்பத்தை நீ
    தின்று அவருடன் என்றும் பிழைத்திட
    — கர்த்தரின்

    2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின்
    சீஷர் குறை தீரு
    பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன
    பந்திதனில சேரு
    சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
    தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே
    — கர்த்தரின்

    3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன்
    ஐக்யப் பந்தியாமே
    துன்பம் துயர் போமே – இருதயம்
    சுத்த திடனாமே
    இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
    ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா
    — கர்த்தரின்


    Karththarin Panthiyil Vaa – Sakotharaa
    Karththarin Panthiyil Vaa
    Karththar Anpaaych Sontha Raththaththaich Sinthina
    Kaaranaththai Manap Pooranamaay Ennnni
    — Karththarin

    1. Jeeva Appam Allo? – Kiristhuvin
    Thiruch Sareeram Allo?
    Paava Manang Kallo? – Unakkaayp
    Pakirappatta Thallo?
    Thaeva Kumaaranaam Jeeva Appaththai Nee
    Thintu Avarudan Entum Pilaiththida
    — Karththarin

    2. Thaeva Anpaip Paaru – Kiristhuvin
    Seeshar Kurai Theeru
    Paavak Kaettak Kootru – Raapposana
    Panthithanil Seru
    Saavukkuriya Maa Paavamulla Lokam
    Thannil Manam Vaiththu Anniyan Aakaathae
    — Karththarin

    3. Anpin Virunthaamae – Karththarudan
    Aikyap Panthiyaamae
    Thunpam Thuyar Pomae – Iruthayam
    Suththa Thidanaamae
    Inpam Mikum Thaeva Anpin Virunthukku
    Aethu Thaamathamum Illaathippothae Vaa
    — Karththarin

    Karththarin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா Karththarin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.