Katti Pidithen Unthan - கட்டிப்பிடித்தேன் உந்தன்

    Katti Pidithen Unthan - கட்டிப்பிடித்தேன் உந்தன்


    கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
    கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
    இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
    இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்
    இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

    1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
    உம் வேதம் ஏந்த வேண்டும்
    தப்பாமல் உம் விருப்பம்
    எப்போதும் செய்ய வேண்டும்

    2. பழிக்கு பழி வாங்கும்
    பகைமை ஒழிய வேண்டும்
    மன்னிக்கும் மனப்பான்மை
    தேசத்தில் மலர வேண்டும்

    3. பிரிந்த குடும்பமெல்லாம்
    மறுபடி இணைய வேண்டும்
    பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
    களிப்பாய் மாற வேண்டும்

    4. வீடு இழந்தவர்கள்
    இடங்கள் பெயர்ந்தவர்கள்
    மறுவாழ்வு பெற வேண்டும்
    மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்


    Kattippitiththaen Unthan Paathaththai
    Kannnneeraal Nanaikkinten Karththaavae
    Ilangaiyilae Yuththangal Oya Vaenndumae
    Ilairellaam Yesuvukkaay Vaalavaenndum
    Irangum Aiyaa Manam Irangumaiyaa

    1. Thuppaakki Aenthum Kaikal
    Um Vaetham Aentha Vaenndum
    Thappaamal Um Viruppam
    Eppothum Seyya Vaenndum

    2. Palikku Pali Vaangum
    Pakaimai Oliya Vaenndum
    Mannikkum Manappaanmai
    Thaesaththil Malara Vaenndum

    3. Pirintha Kudumpamellaam
    Marupati Innaiya Vaenndum
    Pettarin Kannnneer Ellaam
    Kalippaay Maara Vaenndum

    4. Veedu Ilanthavarkal
    Idangal Peyarnthavarkal
    Maruvaalvu Pera Vaenndum
    Makilchchiyaal Nirampa Vaenndum

    Katti Pidithen Unthan - கட்டிப்பிடித்தேன் உந்தன் Katti Pidithen Unthan - கட்டிப்பிடித்தேன் உந்தன் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.