Maa Thayavae Thaeva Thayavae - Christking - Lyrics

    Maa Thayavae Thaeva Thayavae


    மா தயவே தேவ தயவே
    மானிலத்தில் தேவை எனக்கே

    1. வாக்களித்த வானபரன்
    வாக்கு மாறார் நம்பிடுவேன்
    நம்பினோரைக் கைவிடாரே
    நர்பாதமே சரணடைந்தேன் — மா

    2. ஏசுவின் பொன் நாமத்தினால்
    ஏதென்கிலும் கேட்டிடினும்
    தம் சித்தம் போல் தந்திடுவார்
    தந்தையிவர் எந்தனுக்கே — மா

    3. சத்துருக்கள் தூஷித்தாலும்
    சக்தியீந்தென பட்சம் தந்திடுவார்
    ஆதரவே அளித்திடுவார்
    ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் — மா

    4. என்னில் ஏதும் பெலனில்லையே
    எந்தனுக்காய் இராப்பகலாய்
    நீதியுள்ள நேசர் இயேசு
    நித்தியமாய் பரிந்துரைப்பார் — மா

    5. தாய் வயிற்றில் இருந்த முதல்
    தமக்கே என்னை தெரிந்தெடுத்தார்
    என் அழைப்பும் நிறைவேற
    எப்படியும் கிரியை செய்வார் — மா

    6. தம் வருகை தரணியிலே
    தாமதமாய் நடந்தினும்
    சார்ந்தவரை அனுதினமும்
    சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் — மா


    Maa Thayavae Thaeva Thayavae
    Maanilaththil Thaevai Enakkae

    1. Vaakkaliththa Vaanaparan
    Vaakku Maaraar Nampiduvaen
    Nampinoraik Kaividaarae
    Narpaathamae Saranatainthaen — Maa

    2. Aesuvin Pon Naamaththinaal
    Aethenkilum Kaettitinum
    Tham Siththam Pol Thanthiduvaar
    Thanthaiyivar Enthanukkae — Maa

    3. Saththurukkal Thooshiththaalum
    Sakthiyeenthena Patcham Thanthiduvaar
    Aatharavae Aliththiduvaar
    Aaruthalaay Vaalnthiduvaen — Maa

    4. Ennil Aethum Pelanillaiyae
    Enthanukkaay Iraappakalaay
    Neethiyulla Naesar Yesu
    Niththiyamaay Parinthuraippaar — Maa

    5. Thaay Vayittil Iruntha Muthal
    Thamakkae Ennai Therintheduththaar
    En Alaippum Niraivaera
    Eppatiyum Kiriyai Seyvaar — Maa

    6. Tham Varukai Tharanniyilae
    Thaamathamaay Nadanthinum
    Saarnthavarai Anuthinamum
    Sornthidaamal Jepiththiduvaen — Maa

    Maa Thayavae Thaeva Thayavae Maa Thayavae Thaeva Thayavae Reviewed by Christking on October 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.