Malaimel Yeri - மலைமேல் ஏறி

    Malaimel Yeri - மலைமேல் ஏறி


    மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
    மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப
    உலகை மறக்கணுமே தகப்பனே
    உம் குரல் கேட்கணும் நாள்முழுதும்

    காலையும் மாலையும் மதிய வேளையும்
    கைகள் உமை நோக்கி உயரணுமே
    அழியும் உலகத்திற்காய் கதறணுமே
    அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே

    உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
    ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
    வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
    வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்

    ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
    தீர்க்கதரிசனம் சொல்லணும்
    ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்
    வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்


    Malaimael Aeri Vanthaen Thakappanae
    Maruroopam Aakanum Thakappanae – Jepa
    Ulakai Marakkanumae Thakappanae
    Um Kural Kaetkanum Naalmuluthum

    Kaalaiyum Maalaiyum Mathiya Vaelaiyum
    Kaikal Umai Nnokki Uyaranumae
    Aliyum Ulakaththirkaay Katharanumae
    Aruththuk Kalanjiyaththil Serkkanumae

    Umathu Vaarththaikal Unavaay Maaranum
    Ovvoru Naalum Thiyaanikkanum
    Vaethaththin Velichchaththilae Nadakkanum
    Vettik Geethangal Naan Paadanum

    Njaanaththaip Pothiththu Arivai Unarththi
    Theerkkatharisanam Sollanum
    Aavikal Pakuththariyum Varam Vaenndum
    Viyaathikal Neekkum Aattal Vaenndum

    Malaimel Yeri - மலைமேல் ஏறி Malaimel Yeri - மலைமேல் ஏறி Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.