Mesiya Yesu Raja - ேசியா இயேசு ராஜா

    Mesiya Yesu Raja - ேசியா இயேசு ராஜா


    மேசியா இயேசு ராஜா – அவர்
    மீண்டும் வருகிறார் எந்தன் ஆவல் தீர்க்க
    அவர் சீக்கிரம் வருகிறார்
    அவர் முகமே நான் கண்டிடுவேன்
    அவரோடு நானும் சென்றிடுவேன்
    மகிமை மகிமை அந்த நாள் மகிமை

    தேவனின் வருகையில் என் துக்கமெல்லாம்
    சந்தோஷமாகவே மாறியே போகும்
    தேவனுக்காய் பட்ட பாடுகளெல்லாம்
    மகிமையாய் அன்று மாற்றிடுமே
    இன்று காணும் பாடுகள் இனிமேல் வருகின்ற
    மகிமைக்கு ஈடாய் ஆகுமோ

    இயேசுவுக்காய் நான் காத்திருக்கின்றேன்
    ஆயத்தமாய் எதிர் பார்த்திருக்கின்றேன்
    இனியும் தாமதம் செய்யாரே
    அவர் சொன்னபடியே வந்திடுவார்
    அந்த நாளில் அவரை கண்டு நானும்
    ஆடுவேன் பாடுவேன் துள்ளுவேன்

    எனக்காகவே இரத்தம் சிந்தின கரத்தை
    கண்டு ஆயிரம் முத்தங்களிடணும்
    சிலுவை சுமந்து நடந்த பாதம்
    விழுந்து நன்றி சொல்லிடணும்
    இந்த தியாகம் செய்த அன்பு முகமே
    காண ஏங்குகின்றேன்


    Maesiyaa Yesu Raajaa – Avar
    Meenndum Varukiraar Enthan Aaval Theerkka
    Avar Seekkiram Varukiraar
    Avar Mukamae Naan Kanndiduvaen
    Avarodu Naanum Sentiduvaen
    Makimai Makimai Antha Naal Makimai

    Thaevanin Varukaiyil en Thukkamellaam
    Santhoshamaakavae Maariyae Pokum
    Thaevanukkaay Patta Paadukalellaam
    Makimaiyaay Antu Maattidumae
    Intu Kaanum Paadukal Inimael Varukinta
    Makimaikku Eedaay Aakumo

    Yesuvukkaay Naan Kaaththirukkinten
    Aayaththamaay Ethir Paarththirukkinten
    Iniyum Thaamatham Seyyaarae
    Avar Sonnapatiyae Vanthiduvaar
    Antha Naalil Avarai Kanndu Naanum
    Aaduvaen Paaduvaen Thulluvaen

    Enakkaakavae Iraththam Sinthina Karaththai
    Kanndu Aayiram Muththangalidanum
    Siluvai Sumanthu Nadantha Paatham
    Vilunthu Nanti Sollidanum
    Intha Thiyaakam Seytha Anpu Mukamae
    Kaana Aengukinten

    Mesiya Yesu Raja - ேசியா இயேசு ராஜா Mesiya Yesu Raja - ேசியா இயேசு ராஜா Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.