Nambikaiku Uriyavare - நம்பிக்கைக்கு உரியவரே - Christking - Lyrics

    Nambikaiku Uriyavare - நம்பிக்கைக்கு உரியவரே


    நம்பிக்கைக்கு உரியவரே
    நம்பி வந்தேன் உம் சமூகம்
    நம்புகிறேன் உம் வசனம்

    சொந்த ஆற்றலை நம்பவில்லை
    தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
    வாக்குத்தத்தம் செய்தவரே
    வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே

    பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
    உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
    உந்தன் அருள்வாக்கு

    உம்மை நம்புகின்ற மனிதர்களை
    உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
    உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
    உம் வசனம் நம்புவதால்

    தீமை அனைத்தையும் விட்டு விலகி
    உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
    எலும்புகள் உரம் பெறும்
    என் உடலும் நலம் பெறும்

    புயலின் நடுவிலே பக்தன் பவுல்
    வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
    கைதியாக கப்பல் ஏறி
    கேப்டனாக செயல்பட்டார்

    வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
    திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்
    உம் வலையில் பிடிபட்டார்
    தலைவனாக செயல்பட்டார்


    Nampikkaikku Uriyavarae
    Nampi Vanthaen Um Samookam
    Nampukiraen Um Vasanam

    Sontha Aattalai Nampavillai
    Thanthai Ummaiyae Saarnthuvittaen
    Vaakkuththaththam Seythavarae
    Vaalkkaiyellaam Vaarththaithaanae

    Paathaikkuth Theepam Paethaikku Velichcham
    Unthan Vasanamae
    Aattal Mikkathu Jeevanullathu
    Unthan Arulvaakku

    Ummai Nampukinta Manitharkalai
    Umathu Anpu Entum Soolnthu Kollum
    Ullamellaam Makiluthaiyyaa
    Um Vasanam Nampuvathaal

    Theemai Anaiththaiyum Vittu Vilaki
    Umakku Anji Naan Nadanthu Konndaal
    Elumpukal Uram Perum
    En Udalum Nalam Perum

    Puyalin Naduvilae Pakthan Pavul
    Vaarththai Vanthathaal Thidan Konndaar
    Kaithiyaaka Kappal Aeri
    Kaepdanaaka Seyalpattar

    Vaarththai Nampiyathaal Valaikal Veesi
    Thiralaay Paethuru Meenkal Pitiththaar
    Um Valaiyil Pitipattar
    Thalaivanaaka Seyalpattar

    Nambikaiku Uriyavare - நம்பிக்கைக்கு உரியவரே Nambikaiku Uriyavare - நம்பிக்கைக்கு உரியவரே Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.