Margazhi Kuliril - மார்கழி குளிரில் | Christmas Song - Christking - Lyrics

Margazhi Kuliril - மார்கழி குளிரில் | Christmas Song


மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்
மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம்

மின்மினுக்கும் நடத்திரம் போலவே – லலலா
நெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலா
விண்ணில் தூதர் இன்னிசை பாடவே – லலலா
வார்த்தை மனுவாய் ஆனாரே

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas - 2

( I )
அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார்
இருளின் மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார்
அந்த இனிய நன்னாளிது / உள்ளம் மகிழும் பொன்னாளிது

மின்மினுக்கும் நடத்திரம் போலவே ...

( II )
இளந்தளிரே வெள்ளி நிலவே உந்தன் புன்னகை கொள்ளை அழகு
பட்டுப்பூவே மெட்டு இசைப்பேன் சின்ன பாலனே கண்ணுறங்கு
உந்தன் சிரிப்பில் துயரம் மறப்பேன் உந்தன் பிறப்பால் மீட்ப்பை அடைவேன்

மின்மினுக்கும் நடத்திரம் போலவே ...

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas - 2


English


Margazhi Kuliril - மார்கழி குளிரில் | Christmas Song Margazhi Kuliril - மார்கழி குளிரில் | Christmas Song Reviewed by Christking on December 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.