Neer Vaarumae Karththaavae Song Lyrics

    Neer Vaarumae Karththaavae Song Lyrics


    மா அருணோதயமே வாரும்


    1. நீர் வாருமே கர்த்தாவே ராக்காலம் சென்றுபோம்
    மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம்

    2. நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார்
    நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார்

    3. நீர் வாரும் சிருஷ்டியும் தான் படும் துன்பத்தால்
    ஏகோபித்தேங்கி ஆவலாய்த் தவித்து நிற்பதால்

    4. நீர் வாரும் ஆண்டவா மாற்றாரைச் சந்திப்பீர்
    இருப்புக்கோலால் தண்டித்துக் கீழாக்கிப்போடுவீர்

    5. நீர் வாரும் இயேசுவே பயிர் முதிர்ந்ததே
    உம் அரிவாளை நீட்டுமேன் மா நீதிபரரே

    6. நீர் வாரும் வையத்தில் பேர் வாழ்வை நாட்டுவீர்
    பாழான பூமி முற்றிலும் நீர் புதிதாக்குவீர்

    7. நீர் வாரும் இராஜாவே பூலோகம் ஆளுவீர்
    நீங்காத சமாதானத்தின் செங்கோல் செலுத்துவீர்


    Maa Arunnothayamae Vaarum

    1. Neer Vaarumae Karththaavae Raakkaalam Sentupom
    Maa Arunnothayam Kaanavae Aanantham Aakuvom

    2. Neer Vaarum Paktharkal Kalaiththuch Sorkintar
    Nallaavi Manavaattiyum Neer Vaarum Enkiraar

    3. Neer Vaarum Sirushtiyum Thaan Padum Thunpaththaal
    Aekopiththaengi Aavalaayth Thaviththu Nirpathaal

    4. Neer Vaarum Aanndavaa Maattaraich Santhippeer
    Iruppukkolaal Thanntiththuk Geelaakkippoduveer

    5. Neer Vaarum Yesuvae Payir Muthirnthathae
    Um Arivaalai Neettumaen Maa Neethipararae

    6. Neer Vaarum Vaiyaththil Paer Vaalvai Naattuveer
    Paalaana Poomi Muttilum Neer Puthithaakkuveer

    7. Neer Vaarum Iraajaavae Poolokam Aaluveer
    Neengaatha Samaathaanaththin Sengal Seluththuveer

    Neer Vaarumae Karththaavae Song Lyrics Neer Vaarumae Karththaavae Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.