Onrum Illadha - ஒன்றும் இல்லாத | Rev.Prabhu Isaac - Christking - Lyrics

    Onrum Illadha - ஒன்றும் இல்லாத | Rev.Prabhu Isaac


    ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்
    உதவி செய்த எபிநேசரே
    என் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்
    யெகோவாயீரே நீரே

    நன்மைகளின் நாயகன் நீரே
    ஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும்

    1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்
    வெற்றி கொடியை ஏற்றிய நிசியே
    கொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்
    என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே

    நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்
    என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின்

    2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்
    என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரே
    நான் ஆறுதலற்று தவித்த வேளையில்
    என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம் நீரே

    நான் கைவிடப்பட்டு தனித்து நிற்கையில்
    என் கரத்தை பிடித்த ஷம்மா நீரே-2-நன்மைகளின்

    ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்
    உதவி செய்வார் எபிநேசரே
    உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்
    யெகோவாயீரே இயேசு-3


    English


    Onrum Illadha - ஒன்றும் இல்லாத | Rev.Prabhu Isaac Onrum Illadha - ஒன்றும் இல்லாத | Rev.Prabhu Isaac Reviewed by Christking on December 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.