Epoluthu Vidiyum Dheva - Bro. Allen Paul - Christking - Lyrics

    Epoluthu Vidiyum Dheva - Bro. Allen Paul


    எப்பொழுது விடியும் தேவா!...
    எப்பொழுது விடியும் நாதா!...
    ஜாமக்காரன் போல நானும் காத்திருக்கின்றேன்
    நெடுங்காலம் காத்திருந்து சோர்ந்து போகின்றேன்
    -எப்பொழுது விடியும்

    1.நிச்சயமாய் முடிவு உண்டு
    நம்பிக்கை வீண்போகாதென்று
    கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
    நிறைவேறட்டும் இன்று...
    காத்திருக்கின்றேன் நான்
    காத்திருக்கின்றேன்-2
    -எப்பொழுது விடியும்

    2.அற்புதங்கள் அடையாளங்கள்
    இன்று எங்கே? என்று கேட்ட
    கிதியோன் போல நானும்
    எதிர்பார்த்து நிற்கின்றேன்
    இறங்கிடும் தேவா மனம்
    இறங்கிடும் தேவா-2
    -எப்பொழுது விடியும்

    3.அப்போஸ்தலர் காலம் இன்று
    திரும்பிடவும் காத்திருப்பேன்
    அற்புதங்கள் அடையாளங்கள்
    நடந்திடட்டும் இன்று...
    காத்திருக்கின்றேன் நான்
    காத்திருக்கின்றேன்-2
    -எப்பொழுது விடியும்

    English


    Epoluthu Vidiyum Dheva - Bro. Allen Paul Epoluthu Vidiyum Dheva - Bro. Allen Paul Reviewed by Christking on June 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.