Nandriyaal Paadiduvaen - நன்றியால் பாடிடுவேன் | Anita Kingsly - Christking - Lyrics

    Nandriyaal Paadiduvaen - நன்றியால் பாடிடுவேன் | Anita Kingsly


    நன்றியால் பாடிடுவேன்
    நாள்தோறும் பாடிடுவேன்-2
    நல்லவர் என் வாழ்வில்
    செய்தவைகளை எண்ணி
    என்றென்றும் பாடிடுவேன்-2

    1.கடந்திட்ட நாட்களில் உம் கரமே
    என்னை கிருபையால் நடத்தியதே
    கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
    கர்த்தாவே சுமந்திட்டீரே

    களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி

    2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
    உருக்கமாய் இரங்கினீரே
    சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
    புது வழி திறந்திட்டீரே

    ஆயிரம் நாவினால் பாடினாலும்
    உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி

    3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே
    என்றென்றும் பாடிடுவேன்
    ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
    அவர் செய்த நன்மைகட்காய்

    ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
    நின் பாதம் வந்திடுவேன்-2-நன்றி

    English


    Nandriyaal Paadiduvaen - நன்றியால் பாடிடுவேன் | Anita Kingsly Nandriyaal Paadiduvaen - நன்றியால் பாடிடுவேன் | Anita Kingsly Reviewed by Christking on September 18, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.