Aathyil - ஆதியில்| Luke Isaac | Solomon Robert - Christking - Lyrics

    Aathyil - ஆதியில்| Luke Isaac | Solomon Robert


    ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனே
    மாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரே
    பிதாவின் ஏகசுதனான மைந்தனே
    மண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே

    பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்
    இம்மானுவேலனை பணிந்திடுவோம் - 2

    1. இம்மானுவேலன் தேவன் நம்மோடு
    இல்லையே இன்னல் அவர் வாழ்வில் வந்ததால்
    தீர்ந்ததே தொல்லை இனி கவலையே இல்லை
    என் வாழ்வில் மீட்பர் இயேசு வந்ததால் (2) - பாடி

    2.தேவன் நம் மீது அன்பை காட்டிட
    தந்தாரே தம் குமாரனை பலியாக
    பாவம் போக்கும் பரிகாரியான இயேசுவே
    வந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக (2) - பாடி



    English


    Aathyil - ஆதியில்| Luke Isaac | Solomon Robert Aathyil - ஆதியில்| Luke Isaac | Solomon Robert Reviewed by Christking on November 29, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.