Ullam Ellaam Urukuthayyaa - உள்ளம் எல்லாம் உருகுதய்யா - Christking - Lyrics

    Ullam Ellaam Urukuthayyaa - உள்ளம் எல்லாம் உருகுதய்யா


    உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்
    அன்பை நினைக்கையிலே

    தன்னாலே கண்ணு கலங்குது
    கர்த்தாவே உம்மை நினைக்குது

    இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
    நல்ல வாழ்க்கையை தந்தீரே – என்னை
    நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே

    கருவினில் அநாதையானேன்
    தெருவினில் நான் கிடந்தேன்
    அருகினில் வந்து என்னை
    அணைத்த அன்பு தெய்வமே
    அற்புதமே அதிசயமே உம்மை
    நான் என்றும் மறவேன்

    தேற்றிட ஒருவரில்லை
    ஆற்றிட யாருமில்லை
    தூற்றிட பலருண்டு
    சேற்றை வீசும் மனிதருண்டு
    ஏற்றிடும் என் விளக்கை
    தேற்றும் எந்தன் தெய்வமே
    சற்பரனே பொற்பரனே உம்மை
    நான் என்றும் துதிப்பேன்

    ஊரெல்லாம் சென்றிடுவேன்
    உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்
    தெருவெல்லாம் ஏசுவே என்று
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    ஆளுகை செய்யும் என்னை
    எந்தன் அன்பு தெய்வமே
    உம்மையன்றி இவ்வுலகில்
    ஆறுதல் எனக்கு யாருமில்லை

    Ullam Ellaam Urukuthayyaa Unthan
    Anpai Ninaikkaiyilae

    Thannaalae Kannnu Kalanguthu
    Karththaavae Ummai Ninaikkuthu

    Intha Thellup Poochikkum
    Nalla Vaalkkaiyai Thantheerae – Ennai
    Nallavanaakki Allaiyil Vaiththuk Konnteerae

    Karuvinil Anaathaiyaanaen
    Theruvinil Naan Kidanthaen
    Arukinil Vanthu Ennai
    Annaiththa Anpu Theyvamae
    Arputhamae Athisayamae Ummai
    Naan Entum Maravaen
    Thaettida Oruvarillai

    Aattida Yaarumillai
    Thoottida Palarunndu
    Settrai Veesum Manitharunndu
    Aettidum En Vilakkai
    Thaettum Enthan Theyvamae
    Sarparanae Porparanae Ummai
    Naan Entum Thuthippaen

    Oorellaam Sentiduvaen
    Unthan Naamam Parai Saattiduvaen
    Theruvellaam Aesuvae Entu
    Um Naamam Uyarththiduvaen
    Aalukai Seyyum Ennai
    Enthan Anpu Theyvamae
    Ummaiyanti Ivvulakil
    Aaruthal Enakku Yaarumillai
    Ullam Ellaam Urukuthayyaa - உள்ளம் எல்லாம் உருகுதய்யா Ullam Ellaam Urukuthayyaa - உள்ளம் எல்லாம் உருகுதய்யா Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.