Amaithi nilavidum / அமைதி நிலவிடும் காரிருளில் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Amaithi nilavidum / அமைதி நிலவிடும் காரிருளில் - Tamil Christian Songs Lyrics

    அமைதி நிலவிடும் காரிருளில்
    அழுது ஜெபித்திட சென்றார் - ஏசு (2)

    தனக்காக அல்ல நமக்காய்
    தன்னைத்தான் வெறுத்தார் ஜீவித்தார் (2)
    இது போல தியாக பலியானவர்கள்
    இந்த பூலோகில் யாருமில்லை
    நம்மை நேசித்தார் - (2)
    பரலோக தெய்வமகன்

    - அமைதி
    அவருடன் பந்தியில் அமர்ந்தான்
    அவருடன் அப்பமும் புசித்தான் (2)
    இந்த யூதாஸ் என்னும் பணப்பிசாசினால்
    இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார்
    பண ஆசையே - (2)
    எல்லா தீமைக்கும் வேரல்லோ

    - அமைதி
    சத்தியம் தள்ளுபடியாயிற்றே
    சத்துருவின் கைகள் ஓங்கிற்றே (2)
    வேஷம் மாறும் சாத்தான் வேதம் ஓதுகிறான்
    வேதப் புரட்டன வஞ்சிக்கிறான்
    ஜாமக்காரரே - (2)
    விழித்தலறி ஜெபிப்போம்

    - அமைதி
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Amaithi nilavidum / அமைதி நிலவிடும் காரிருளில் - Tamil Christian Songs Lyrics Amaithi nilavidum / அமைதி நிலவிடும் காரிருளில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.