Annandamai inba / ஆனந்தமாய் இன்பக் காணான் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Annandamai inba / ஆனந்தமாய் இன்பக் காணான் - Tamil Christian Songs Lyrics

    ஆனந்தமாய் இன்பக் காணான் ஏகிடுவேன்
    தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் (2)

    நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
    நதான் இயேசு என்னோடிருப்பார்

                                                                   - ஆனந்தமாய்
    சேற்றினின் றென்னதை; தூக்கி யெடுத்து
    மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
    கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
    கண்டு நன்றியுடன் பாடிடுவேன்

                                                                    - ஆனந்தமாய்
    வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
    வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
    எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
    இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்

                                                                     - ஆனந்தமாய்
    கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
    தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
    இயேசு அல்லால் ஆசை இப்பூவில் வேறே இல்லை
    என்றும் எனக்கவர் ஆதரவே

                                                                      - ஆனந்தமாய்


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Annandamai inba / ஆனந்தமாய் இன்பக் காணான் - Tamil Christian Songs Lyrics Annandamai inba / ஆனந்தமாய் இன்பக் காணான் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.