Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics

    Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics



        நீரின்றி வாழ்வேது இறைவா - உம்
        நினைவின்றி மகிழ்வேது தேவா (2)
        உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் (2)
        உம் இல்லத்தில் நான் வாழும் ஒரு நாளே போதும்

        - நீரின்றி வாழ்வேது

        பல கோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும் - இயேசுவே
        நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் (2)
        ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே - உம்
        வார்த்தையில் உண்டு அற்புதமே

        - நீரின்றி வாழ்வேது

        கல்லுக்கு தேரையை வைத்தவர் நீர்
        அதற்குள்ளும் ஜீவனைத் தந்தவர் நீர் (2)
        உமையன்றி அணுவேதும் அசையாதய்யா
        உம் துணையின்றி உயிர் வாழ முடியாதய்யா

        - நீரின்றி வாழ்வேது
        எத்தனை நன்மைகள் செய்தீரய்யா - அதில்
        எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா (2)
        அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
        ஆயிரம் ஆண்டுகள் போதாதய்யா

        - நீரின்றி வாழ்வேது

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics Neerindri valvedu / நீரின்றி வாழ்வேது இறைவா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.