Rajareka kebera thoniyooda / ராஜரீக கெம்பீர தொனியோடே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Rajareka kebera thoniyooda / ராஜரீக கெம்பீர தொனியோடே - Tamil Christian Songs Lyrics



ராஜரீக கெம்பீர தொனியோடே
ராஜ ராஜனை தேவ தேவனை
வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி (2)
வீரசேனை கூட்டமாக சேவிப்போம்

மெய் சீஷராக ஏசுவின் பின் செல்லுவோம்
முற்று முடிய வெற்றியடைய
சுற்றும் அஞ்சிடாமல் ஏசு நாமத்தில்
சுhத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம்

சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாக
சூரியனைப் போல் சந்திரனைப் போல்
கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க (2)
கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள்

- மெய் சீராக
தாவீதை விரட்டிடும் சவுல் கைகள்
தளர்திடவே அடங்கிடவே
பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும் (2)
பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம்

- மெய் சீசராக
ஜெபமே எமது அஸ்திபாரமே
ஜெபமின்றியே ஜெயமில்லையே
ஆவியில் ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம் (2)
ஆச்சரியமாகவே நடத்துவார்

- மெய் சீசராக

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Rajareka kebera thoniyooda / ராஜரீக கெம்பீர தொனியோடே - Tamil Christian Songs Lyrics Rajareka kebera thoniyooda / ராஜரீக கெம்பீர தொனியோடே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 01, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.