Retippana nanmaigal thanthida / இரட்டிப்பான நன்மைகள் - Tamil Christian Songs Lyrics
இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே (2)
முன் மாரி மேல் பின் மாரி மழையே
உன்னதத்தினின்று வந்திறங்குதே (2)
- இரட்டிப்பான
பெலத்தின் மேல் மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட (2)
சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் (2)
- இரட்டிப்பான
ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய்ப் பெற்றிட (2)
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம் (2)
- இரட்டிப்பான
பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட (2)
நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம் (2)
- இரட்டிப்பான
Retippana nanmaigal thanthida / இரட்டிப்பான நன்மைகள் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 10, 2015
Rating:
Good
ReplyDelete