Deva sabayella devan / தேவ சபையிலே தேவன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Deva sabayella devan / தேவ சபையிலே தேவன் - Tamil Christian Songs Lyrics

    தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
    பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் (2)

    பயத்தோடே நல் பக்தியோடே
    தேவனை ஆராதிப்போம் (2)
    வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் (2)

    - தேவ சபையிலே
    ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
    நித்திய கன்மலையே (2)
    யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே (2)

    - தேவ சபையிலே
    இராப்பகலாய் தம் கண்மணிபோல்
    தூங்காது காப்பவரே (2)
    தாயினும் மேலாக தாங்கி ஆதாரிப்பார் (2)

    - தேவ சபையிலே
    உலகின் முடிவு வரைக்கும் நான்
    உன்னோடிருப்பேன் என்றாரே (2)
    அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் (2)

    - தேவ சபையிலே


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Deva sabayella devan / தேவ சபையிலே தேவன் - Tamil Christian Songs Lyrics Deva sabayella devan / தேவ சபையிலே தேவன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.