Deva um namathi / தேவா உன் நாமத்தைப் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Deva um namathi / தேவா உன் நாமத்தைப் - Tamil Christian Songs Lyrics

    தேவா உன் நாமத்தைப் பாடிப் புகழுவேன்
    ஆனந்தம் ஆனந்தமே
    நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம்
    ஆனந்தம் ஆனந்தமே
    ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே
    திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

    கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றிப் பாடிப்போற்ற
    துதிக்குப் பாத்திரரே
    துதிகளின் மத்தியிலே வாசம் செய்திடும்
    மகிமைக்குப் பாத்திரரே
    ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே
    திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

    காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்திய
    அற்புத தேவன் நீரே
    அக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்
    அதிசய தேவன் நீரே
    ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே
    திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

    வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
    உன்னத தேவன் நீரே
    நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்
    உத்தம தேவன் நீரே
    ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே
    திக்கற்ற பிள்ளைகளின் தேவனே


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Deva um namathi / தேவா உன் நாமத்தைப் - Tamil Christian Songs Lyrics Deva um namathi / தேவா உன் நாமத்தைப் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.