Aathmama Un Andavarin / ஆத்மமே உன் ஆண்டவரின் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aathmama Un Andavarin / ஆத்மமே உன் ஆண்டவரின் - Tamil Christian Songs Lyrics


    1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
    திருப்பாதம் பணிந்து,
    மீட்பு, சுகம், ஜீவன், அருள்
    பெற்றதாலே துதித்து,
    அல்லேலுயா, என்றென்றைக்கும்
    நித்திய நாதரைப்போற்று.

    2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
    தயை நன்மைக்காய் துதி;
    கோபங்கொண்டும் அருள் ஈயும்
    என்றும் மாறாதோர் துதி;
    அல்லேலுயா, அவர் உண்மை
    மா மகிமையாம் துதி.

    3. தந்தை போல் மா தயை உள்ளோர்;
    நீச மண்ணோர் நம்மையே
    அன்பின் கரம் கொண்டு தாங்கி
    மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!
    அல்லேலுயா, இன்னும் அவர்
    அருள் விரிவானதே.

    4. என்றும் நின்றவர் சமுகம்
    போற்றும் தூதர் கூட்டமே,
    நாற்றிசையும் நின்றெழுத்து
    பணிவர் நீர் பக்தரே;
    அல்லேலுயா, அனைவோரும்
    அன்பின் தெய்வம் போற்றுமே.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aathmama Un Andavarin / ஆத்மமே உன் ஆண்டவரின் - Tamil Christian Songs Lyrics Aathmama Un Andavarin / ஆத்மமே உன் ஆண்டவரின் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.