Andava Prisanamaagai / ஆண்டவா பிரசன்னமாகி - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Andava Prisanamaagai / ஆண்டவா பிரசன்னமாகி - Tamil Christian Songs Lyrics


    1. ஆண்டவா பிரசன்னமாகி
    ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
    ஆசை காட்டும் தாசர்மீதில்
    ஆசீர்வாதம் ஊற்றிடும்.

          அருள்மாரி எங்கள் பேரில்
          வருஷிக்கப் பண்ணுவீர்.
          ஆசையோடு நிற்கிறோமே,
          ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

    2. தேவரீரின் பாதத்தண்டை
    ஆவலோடே கூடினோம்;
    உந்தன் திவ்விய அபிஷேகம்
    நம்பி நாடி அண்டினோம்.

    3. ஆண்டவா , மெய்பக்தர் செய்யும்
    வேண்டுகோளைக் கேட்கிறீர்;
    அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
    இன்று மூட்டி நிற்கிறீர்.

    4. தாசர் தேடும் அபிஷேகம்
    இயேசுவே! கடாட்சியும்;
    பெந்தே கொஸ்தின் திவ்விய ஈவை
    தந்து ஆசீர்வதியும்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Andava Prisanamaagai / ஆண்டவா பிரசன்னமாகி - Tamil Christian Songs Lyrics Andava Prisanamaagai / ஆண்டவா பிரசன்னமாகி - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.