Aathumakkal Meyiparo / ஆத்துமாக்கள் மேய்ப்பரே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aathumakkal Meyiparo / ஆத்துமாக்கள் மேய்ப்பரே - Tamil Christian Songs Lyrics


    1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
    மந்தையைப் பட்சிக்கவும்
    சாத்தான் பாயும் ஓநாய் போல்
    கிட்டிச்சேரும் நேரமும்,
    நாசமோசம் இன்றியே
    காரும், நல்ல மேய்ப்பரே.

    2. பணம் ஒன்றே ஆசிக்கும்
    கூலியாளோ ஓடுவோன்;
    காவல் இன்றிக் கிடக்கும்
    தொழுவத்தின் வாசல்தான்;
    வாசல், காவல் ஆன நீர்
    மந்தைமுன் நின்றருள்வீர்.

    3. கெட்டுப்போன யூதாஸின்
    ஸ்தானத்திற்குத் தேவரீர்,
    சீஷர் சீட்டுப்போடவே
    மத்தியா நியமித்தீர்;
    எங்கள் ஐயம் யாவிலும்,
    கர்த்தரே, நடத்திடும்.

    4. புது சீயோன் நகரில்
    பக்தர் வரிசையிலே
    நிற்கும் மத்தியாவோடும்
    நாங்கள் சேரச் செய்யுமே
    கண் குளிர உம்மையும்
    காணும் பாக்கியம் அருளும்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aathumakkal Meyiparo / ஆத்துமாக்கள் மேய்ப்பரே - Tamil Christian Songs Lyrics Aathumakkal Meyiparo / ஆத்துமாக்கள் மேய்ப்பரே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.