Alaluya Ippodhu Pooar / அல்லேலுயா இப்போது போர் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Alaluya Ippodhu Pooar / அல்லேலுயா இப்போது போர் - Tamil Christian Songs Lyrics


    1. அருள் மாரி எங்குமாக
    பெய்ய, அடியேனையும்
    கர்த்தரே, நீர் நேசமாக
    சந்தித்தாசீர்வதியும்;
    என்னையும், என்னையும்
    சந்தித்தாசீர்வதியும்.

    2. என் பிதாவே, பாவியேனை
    கைவிடாமல் நோக்குமேன்;
    திக்கில்லா இவ்வேழையேனை
    நீர் அணைத்துக் காருமேன்;
    என்னையும், என்னையும்
    நீர் அணைத்துக் காருமேன்.

    3. இயேசுவே, நீர் கைவிடாமல்
    என்னைச் சேர்த்து ரட்சியும்;
    ரத்தத்தாலே மாசில்லாமல்
    சுத்தமாக்கியருளும்;
    என்னையும், என்னையும்
    சுத்தமாக்கியருளும்.

    4. தூய ஆவீ, கைவிடாமல்
    என்னை ஆட்கொண்டருளும்;
    பாதை காட்டிக் கேடில்லாமல்
    என்றும் காத்துத் தேற்றிடும்;
    என்னையும், என்னையும்
    என்றும் காத்துத் தேற்றிடும்.

    5. மாறா சுத்த தெய்வ அன்பும்,
    மீட்பர் தூய ரத்தமும்,
    தெய்வ ஆவி சக்திதானும்
    மாண்பாய்த் தோன்றச்செய்திடும்;
    என்னிலும், என்னிலும்
    மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Alaluya Ippodhu Pooar / அல்லேலுயா இப்போது போர் - Tamil Christian Songs Lyrics Alaluya Ippodhu Pooar / அல்லேலுயா இப்போது போர் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.