Amaidhi Anbin Swamiya / அமைதி அன்பின் ஸ்வாமியே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Amaidhi Anbin Swamiya / அமைதி அன்பின் ஸ்வாமியே - Tamil Christian Songs Lyrics


    1. அமைதி அன்பின் ஸ்வாமியே,
    இப்பாரில் யுத்தம் மூண்டதே;
    விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,
    பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    2. எம் முன்னோர் காலம் தேவரீர்
    செய்த மா கிரியை நினைப்பீர்;
    எம் பாவம் நினையாதேயும்
    பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை;
    கடைப்பிடிப்போம் உம் வாக்கை;
    வீண் ஆகாதே யார் வேண்டலும்;
    பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    4. விண் தூதர் தூயோர் அன்பினில்
    இசைந்தே வாழும் மோட்சத்தில்
    உம் அடியாரைச் சேர்த்திடும்;
    பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Amaidhi Anbin Swamiya / அமைதி அன்பின் ஸ்வாமியே - Tamil Christian Songs Lyrics Amaidhi Anbin Swamiya / அமைதி அன்பின் ஸ்வாமியே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.