Andha Naal Bakiya Naal / அந்த நாள் பாக்கிய நாள் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Andha Naal Bakiya Naal / அந்த நாள் பாக்கிய நாள் - Tamil Christian Songs Lyrics


    அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட
    அந்த நாள் பாக்கிய நாள்

    அனுபல்லவி

    அந்தநாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை
    அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள்
    — அந்த

    சரணங்கள்

    1. அன்றே எனக்குப் பேதித்தார் – அவர் வழியில்
    அநுதினம் செல்லக் கற்பித்தார்;
    என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
    ஏவினார் என் இரட்சகர், எங்கும் எடுத்துரைப்பேனே
    — அந்த

    2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்
    இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
    சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,
    இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன்
    — அந்த

    3. ஆறுதல்களால் நிறைந்தேன் – அளவில்லாத
    ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
    தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
    மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன்
    — அந்த

    4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் – உறுதியாக
    எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
    சொன்ன இவ்வாக்கை நிதம் , சுத்தமாய் நிறைவேற்ற
    உன்னத பலம் தாராய் , என்னையாட்கொண்ட தேவா
    — அந்த


    Antha Naal Paakkiya Naal – Naan Meetkappatta
    Antha Naal Paakkiya Naal

    Anupallavi

    Anthanaal Aananthanaal, Arumai Iratchakarennai
    Anpodalaiththenathu Asuththangal Neekkina Naal
    — Antha

    Saranangal

    1. Ante Enakkup Paethiththaar – Avar Valiyil
    Anuthinam Sellak Karpiththaar;
    Entum Avarmael Saarnthae Inpa Jeeviyam Seyya
    Aevinaar en Iratchakar, Engum Eduththuraippaenae
    — Antha

    2. Entanai Ante Iluththaar- Thamathanpinaal
    Isaivaayth Thammudan Innaiththaar;
    Sontham Naan Avarukkuch Sontham Avar Enakku,
    Intha Uruthipannnni Iniya Aikkiyam Petten
    — Antha

    3. Aaruthalkalaal Nirainthaen – Alavillaatha
    Aasikalinaal Makilnthaen;
    Thaarumaaraana Ullam Maaruthalai Yatainthu
    Maaraatha Yaesuvinil Makimaiyaayth Thangap Petten
    — Antha

    4. Annaalil Vaakkup Pannnninaen – Uruthiyaaka
    Ennaalum Naan Puthuppippaen;
    Sonna Ivvaakkai Nitham , Suththamaay Niraivaetta
    Unnatha Palam Thaaraay , Ennaiyaatkonnda Thaevaa
    — Antha

    Andha Naal Bakiya Naal / அந்த நாள் பாக்கிய நாள் - Tamil Christian Songs Lyrics Andha Naal Bakiya Naal / அந்த நாள் பாக்கிய நாள் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5
    Powered by Blogger.