Anba Piradhanam Sagodra / அன்பே பிரதானம் சகோதர - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anba Piradhanam Sagodra / அன்பே பிரதானம் சகோதர - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    அன்பே பிரதானம் - சகோதர
    அன்பே பிரதானம்

    சரணங்கள்

    1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை,
    இன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம் --- அன்பே

    2. பலபல பாஷை - படித்தறிந்தாலும்,
    கல கல வென்னும் - கைம்மணியாமே --- அன்பே

    3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,
    அன்பிலையானால் - அதிற்பயனில்லை --- அன்பே

    4. துணிவுடனுடலைச் - சுடக்கொடுத்தாலும்,
    பணிய அன்பில்லால் - பயனதில்லை --- அன்பே

    5. சாந்தமும் தயவும் - சகல நற்குணமும்,
    போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள --- அன்பே

    6. புகழிறு மாப்பு - பொழிவு பொறாமை,
    பகைய நியாயப் - பாவமுஞ் செய்யா --- அன்பே

    7. சினமடையாது - தீங்கு முன்னாது,
    தினமழியாது - தீமை செய்யாது --- அன்பே

    8. சகலமுந் தாங்கும் - சகலமும் நம்பும்,
    மிகைபட வென்றும் - மேன்மை பெற்றோங்கும் --- அன்பே
     
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anba Piradhanam Sagodra / அன்பே பிரதானம் சகோதர - Tamil Christian Songs Lyrics Anba Piradhanam Sagodra / அன்பே பிரதானம் சகோதர - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.