Arulnadha Nambi Vandhan / அருள்நாதா நம்பி வந்தேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Arulnadha Nambi Vandhan / அருள்நாதா நம்பி வந்தேன் - Tamil Christian Songs Lyrics


    1. அருள்நாதா நம்பிவந்தேன்,
    நோக்கக்கடவீர்.
    கைமாறின்றி என்னை முற்றும்
    ரக்ஷிப்பீர்.

    2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
    திருப் பாதத்தில்;
    பாவ மன்னிப்பருள்வீர் இந்
    நேரத்தில்.

    3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
    உந்தன் ஆவியால்;
    சுத்திசெய்வீர் மாசில்லாத
    ரத்தத்தால்.

    4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
    பாதை காட்டுவீர்;
    திருப்தி செய்து நித்தம் நன்மை
    நல்குவீர்.

    5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
    ஞானம் பெலனும்;
    அக்னி நாவும் வல்ல வாக்கும்
    ஈந்திடும்.

    6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,
    தவறாமலே
    என்னை என்றும் தாங்கி நின்று
    காருமே.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Arulnadha Nambi Vandhan / அருள்நாதா நம்பி வந்தேன் - Tamil Christian Songs Lyrics Arulnadha Nambi Vandhan / அருள்நாதா நம்பி வந்தேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.