Athi Mangala Karanana / அதி மங்கல காரணணே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Athi Mangala Karanana / அதி மங்கல காரணணே - Tamil Christian Songs Lyrics


    அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்  

    வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த 

    வண்மையே தாரணனே!

    சரணங்கள்

    1. மதி-மங்கின எங்களுக்கும்,
    திதி-சிங்கினர் தங்களுக்கும்
    உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
    தோன்றிடவையாய் துங்கவனே --- அதி-மங்கல

    2. முடி-மன்னர்கள் மேடையும்,
    மிகு-உன்னத வீடதையும் நீங்கி
    மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
    வந்தனையோ தரையில்? --- அதி-மங்கல

    3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
    உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
    பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
    பெற்ற நற்கோலம் இதோ? --- அதி-மங்கல
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Athi Mangala Karanana / அதி மங்கல காரணணே - Tamil Christian Songs Lyrics Athi Mangala Karanana / அதி மங்கல காரணணே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.