Devathi devanai rajathai / தேவாதி தேவனை ராஜாதி - Tamil Christian Songs Lyrics

கர்த்தாதி கர்த்தனை தொழுகிறோம் (2)
மூன்றில் ஒன்றாய் விளங்கும் பரலோக
திரியேக தேவனை தொழுகிறோம்
தூய கிறிஸ்தேசு நாமத்தை தொழுகிறோம்
- தேவாதி
அண்ட சராசரம் அகிலமும்
ஆண்டவர் படைத்தாரே (2)
கைப்பிடி மண்ணினாலே எம்மை
கனிவோடு வனைந்தாரே
எம்மாத்திரம் என்னையும் தேவன் (2)
எண்ணி நினைத்திடவோ
- தேவாதி
சுpந்தை குளிர்ந்திட பாடிடுவேன்
ஏந்தை குரு ஏசுவை (2)
அருணோதயம் உதிக்கும் உள்ளம்
அதிகாலை நன்றி பொங்கும்
வளரும் விசுவாசமே நித்தம் (2)
வழிந்தோடும் தேவ அன்பே
- தேவாதி
நாச மோசம் ஒன்றும் நெருக்காமல்
பாசமுடன் காப்பாரே (2)
வேடன் கண்ணி தப்பி நான்
வானம் பாடி பறவையைப் போல்
உயரே பறந்தேசுவின் பாதம் (2)
பயமின்றி தங்கிடுவேன்
Devathi devanai rajathai / தேவாதி தேவனை ராஜாதி - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 16, 2015
Rating:

No comments: