Dhookam Kondada Vaaruma / துக்கம் கொண்டாட வாருமே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Dhookam Kondada Vaaruma / துக்கம் கொண்டாட வாருமே - Tamil Christian Songs Lyrics

    1. துக்கம் கொண்டாட வாருமே,
    பாரும்! நம் மீட்பர் மரித்தார்
    திகில் கலக்கம் கொள்ளுவோம்
    இயேசு சிலுவையில் மாண்டார்.

    2. போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
    மா பொறுமையாய்ச் சகித்தார்
    நாமோ புலம்பி அழுவோம்;
    இயேசு சிலுவையில் மாண்டார்.

    3. கை காலை ஆணி பீறிற்றே,
    தவனத்தால் நா வறண்டார்;
    கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
    இயேசு சிலுவையில் மாண்டார்.

    4. மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
    தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
    நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
    இயேசு சிலுவையில் மாண்டார்.

    5. சிலுவையண்டை வந்துசேர்,
    நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
    ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
    இயேசு சிலுவையில் மாண்டார்.

    6. உருகும் நெஞ்சும் கண்ணீரும்
    உள்ளன்பும் தாரும், இயேசுவே;
    மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
    நீர் சிலுவையில் மாண்டீரே!

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Dhookam Kondada Vaaruma / துக்கம் கொண்டாட வாருமே - Tamil Christian Songs Lyrics Dhookam Kondada Vaaruma / துக்கம் கொண்டாட வாருமே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.