Endhan Aathuma Nesera / என்தன் ஆத்ம நேசரே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Endhan Aathuma Nesera / என்தன் ஆத்ம நேசரே - Tamil Christian Songs Lyrics


    1. என்தன் ஆத்ம நேசரே,
    வெள்ளம் போன்ற துன்பத்தில்,
    தாசன் திக்கில்லாமலே
    தடுமாறிப் போகையில்,
    தஞ்சம் தந்து, இயேசுவே,
    திவ்விய மாஅர்பில் காருமேன்;
    அப்பால் கரையேற்றிய
    மோட்ச வீட்டில் சேருமேன்.

    2. வல்ல தேவரீர் அல்லால்
    வேறே தஞ்சம் அறியேன்;
    கைவிடாமல் நேசத்தால்
    ஆற்றித் தேற்றித் தாங்குமேன்;
    நீரே என்தன் நம்பிக்கை,
    நீர் சகாயம் செய்குவீர்;
    ஏதுமற்ற ஏழையை
    செட்டையாலே மூடுவீர்.

    3. குறை யாவும் நீக்கிட,
    நாதா, நீர் சம்பூரணர்;
    திக்கற்றோரைத் தாங்கிட
    நீரே மா தயாபரர்;
    நான் அசுத்த பாவிதான்,
    நீரோ தூயர் தூயரே;
    நான் அநீதி கேடுள்ளான்,
    நீர் நிறைந்த நித்தியரே.

    4. பாவம் யாவும் மன்னிக்க
    ஆரருள் அமைந்த நீர்
    என்னைச் சுத்திகரிக்க
    அருள் பாயச் செய்குவீர்;
    ஜீவ ஊற்றாம் இயேசுவே,
    என்தன் தாகம் தீருமேன்,
    ஸ்வாமீ, என்றும் என்னிலே
    நீர் சுரந்து ஊற்றுமேன்Songs

    Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Endhan Aathuma Nesera / என்தன் ஆத்ம நேசரே - Tamil Christian Songs Lyrics Endhan Aathuma Nesera / என்தன் ஆத்ம நேசரே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.