En Meetpar Retham Sindhinaar / என் மீட்பர் ரத்தம் சிந்தினார் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    En Meetpar Retham Sindhinaar / என் மீட்பர் ரத்தம் சிந்தினார் - Tamil Christian Songs Lyrics


    1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
    மா நீதியும் சம்பாதித்தார்;
    என் சொந்த நீதி வெறுத்தேன்,
    இயேசுவின் நாமம் நம்புவேன்;
    நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
    வேறஸ்திபாரம் மணல் தான்.

    2. கார் மேகம் அவர் முகத்தை
    மறைக்கும் காலம், அவரை
    எப்போதும்போல நம்புவேன்,
    மாறாதவர் என்றறிவேன்;
    நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
    வேறஸ்திபாரம் மணல் தான்.

    3. மரண வெள்ளம் பொங்கினும்,
    என் மாம்சம் சோர்ந்து போயினும்,
    உன் வாக்குத்தத்தம் ஆணையும்
    என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
    நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
    வேறஸ்திபாரம் மணல் தான்.

    4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
    எக்காள சத்தம் கேட்கையில்,
    அஞ்சேன் என் மீட்பர் நீதியே
    அநீதன் என்னை மூடுமே;
    நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
    வேறஸ்திபாரம் மணல் தான்.

    SongsLyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    En Meetpar Retham Sindhinaar / என் மீட்பர் ரத்தம் சிந்தினார் - Tamil Christian Songs Lyrics En Meetpar Retham Sindhinaar / என் மீட்பர் ரத்தம் சிந்தினார் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.