Ha Ippa Illamay / ஆ இன்ப இல்லமே! - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ha Ippa Illamay / ஆ இன்ப இல்லமே! - Tamil Christian Songs Lyrics


    1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
    தழைத்து வாழ்க;
    அன்புடன் பாலர் யாரும் அங்கு
    ஐக்கியமாய் ஓங்க;
    அன்னை தந்தை
    ஆவலாய்ப் பாலகரை
    ஆண்டவன் பாதம் படைக்க.

    2. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்
    சுகம் தழைக்க;
    உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
    உகந்து செய்ய;
    பக்தியுடன்
    பற்பல சேவை ஆற்றி,
    கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

    3. ஆ இன்ப இல்லமே! நன்மை
    பெருகும் அந்நாளில்
    ஆண்டவர் நாமத்தை ஆர்வ
    நன்றியுடன் போற்று;
    துன்பம் துக்கம்
    துயரம் தொடர் நாளில்
    அன்றும் அவரைக் கொண்டாடு.

    4. ஆ இன்ப இல்லமே! உன்
    உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
    அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
    என்றும் நடத்தும்;
    இவ்வாழ்வின்பின்
    உன் மக்களை அவரே
    விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ha Ippa Illamay / ஆ இன்ப இல்லமே! - Tamil Christian Songs Lyrics Ha Ippa Illamay / ஆ இன்ப இல்லமே! - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.