Ha Yesuva Naan Boomiel / ஆ இயேசுவே நான் பூமியில் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ha Yesuva Naan Boomiel / ஆ இயேசுவே நான் பூமியில் - Tamil Christian Songs Lyrics


    1. ஆ இயேசுவே, நான் பூமியில்
    உயர்த்தப்பட்டிருக்கையில்
    எல்லாரையும் என் பக்கமே
    இழுத்துக்கொள்வேன் என்றீரே.

    2. அவ்வாறென்னை இழுக்கையில்,
    என் ஆசை கெட்ட லோகத்தில்
    செல்லாமல்; பாவத்தை விடும்,
    அநந்த நன்மைக்குட்படும்.

    3. தராதலத்தில் உம்முடன்
    உபத்திரவப்படாதவன்
    உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
    சகிப்பவன் சந்தோஷிப்பான்.

    4. பிதாவின் வீட்டில் தேவரீர்
    ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
    அங்கே வசிக்கும் தூயவர்
    இக்கட்டும் நோவும் அற்றவர்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ha Yesuva Naan Boomiel / ஆ இயேசுவே நான் பூமியில் - Tamil Christian Songs Lyrics Ha Yesuva Naan Boomiel / ஆ இயேசுவே நான் பூமியில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.