Ha Yesuva Ummala - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ha Yesuva Ummala - Tamil Christian Songs Lyrics


    1. ஆ இயேசுவே, உம்மாலே
    நான் மீட்கப்பட்டவன்;
    உம் திவ்விய ரத்தத்தாலே
    நான் சுத்தமானவன்;
    மிகுந்த கஸ்தியாலே
    என் தோஷத்தைத் தீர்த்தீர்;
    உமது சாவினாலே
    நீர் என்னை ரட்சித்தீர்.

    2. நான் உம்மால் என்றும் வாழ,
    இப்பந்தியில் நீரே
    என் ஆவிக் கேற்றதான
    அமிர்தம் தந்தீரே;
    உம் ஆசீர்வாதம் ஈந்து,
    என் பாவம் மன்னியும்;
    அன்போடு என்னைச் சேர்த்து,
    தயாளம் காண்பியும்.

    3. நீர் இன்னும் என்னில் காணும்
    பொல்லாங்கு யாவையும்
    அகற்றிப்போட வாரும்,
    என் நெஞ்சில் தங்கிடும்;
    நான் உம்மைப் பற்றிக் கொள்ள
    கருணை புரியும்;
    மிகுந்த தாழ்மையுள்ள
    சித்தம் கடாஷியும்.

    4. நல் மீட்பரே, உம்மோடு
    நான் ஐக்கியமாகவும்,
    நாடோறும் வாஞ்சையோடு
    உம்மில் நிலைக்கவும்,
    மிகுந்த அன்பினாலே
    துணை செய்தருளும்;
    தெய்வீக அப்பத்தாலே
    நீர் என்னைப் போஷியும்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ha Yesuva Ummala - Tamil Christian Songs Lyrics Ha Yesuva Ummala  - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5
    Powered by Blogger.