Meetpar Yesu Kurisil Thonginaara / மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Meetpar Yesu Kurisil Thonginaara / மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே - Tamil Christian Songs Lyrics


    மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
    மூன்றாணி மீதில் காயம் அடைந்தே

    1. லோகப்பாவம் தீர்க்க பலியான
    தேவ ஆட்டுக்குட்டியானவர்
    சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
    இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் --- மீட்பர்

    2. இயேசுவே கல்வாரி சிலுவையில்
    ஏறி ஜீவன் தந்திராவிடில்
    ஏழையான் என் பாவ பாரங்களை
    எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் பூவில் --- மீட்பர்

    3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோ
    என்று இயேசு கதறினாரே
    பாவத்தால் பிதாவின் முகத்தையும்
    பார்க்கவும் முடியவில்லையே - அவர் --- மீட்பர்

    4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்
    அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
    ஆச்சரிய தேவ அன்பைப்பாட
    ஆயிரம் நாவுகள் போதுமோ பதினாயிரம் --- மீட்பர்

    5. பாவ பாரம் லோகக் கவலைகள்
    தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
    தேடி, நாடி ஓடி வந்தால் உன்னைத்
    தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர் - இப்போ --- மீட்பர்

    6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
    கல்மனமும் உருகிடுமே
    மாயலோக ஆசை வஞ்சிக்குமே
    மாறிடாத இயேசு போதுமே - என்றும் --- மீட்பர்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Meetpar Yesu Kurisil Thonginaara / மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே - Tamil Christian Songs Lyrics Meetpar Yesu Kurisil Thonginaara / மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.