Naan paavi Thaan Aanalum / நான் பாவிதான் ஆனாலும் நீர் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Naan paavi Thaan Aanalum / நான் பாவிதான் ஆனாலும் நீர் - Tamil Christian Songs Lyrics

    1. நான் பாவிதான் - ஆனாலும் நீர்
    மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
    வா என்று என்னை அழைத்தீர்
    என் மீட்பரே, வந்தேன்.

    2. நான் பாவிதான் - என் நெஞ்சிலே
    கறை பிடித்துக் கெட்டேனே
    என் கறை நீங்க இப்போதே,
    என் மீட்பரே, வந்தேன்.

    3. நான் பாவிதான் - மா பயத்தால்
    திகைத்து, பாவபாரத்தால்
    அமிழ்ந்து மாண்டு போவதால்,
    என் மீட்பரே, வந்தேன்.

    4. நான் பாவிதான் - மெய்யாயினும்
    சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
    அடைவதற்கு உம்மிடம்
    என் மீட்பரே, வந்தேன்.

    5. நான் பாவிதான் - இரங்குவீர்
    அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
    அருளாம் செல்வம் அளிப்பீர்;
    என் மீட்பரே, வந்தேன்.

    6. நான் பாவிதான் - அன்பாக நீர்
    நீங்கா தடைகள் நீக்கினீர்;
    உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
    என் மீட்பரே, வந்தேன்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Naan paavi Thaan Aanalum / நான் பாவிதான் ஆனாலும் நீர் - Tamil Christian Songs Lyrics Naan paavi Thaan Aanalum / நான் பாவிதான் ஆனாலும் நீர் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.