Neer Thandha Nanmai Yaviyaum / நீர் தந்த நன்மை யாவையும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Neer Thandha Nanmai Yaviyaum / நீர் தந்த நன்மை யாவையும் - Tamil Christian Songs Lyrics

    1. நீர் தந்த நன்மை யாவையும்
    நினைத்து, கர்த்தரே,
    மகிழ்ச்சியோடு என்றைக்கும்
    நான் துதி செய்வேனே.

    2. குழந்தைப் பருவமுதல்
    குறைவில்லாமலே
    எனக்களித்த நன்மைகள்
    ஏராளமானதே.

    3. என்னோடு வாலிபத்திலும்
    இருந்தீர் தேவரீர்;
    இக்கட்டுண்டான காலத்தும்
    விழாமல் தாங்கினீர்.

    4. அநேகமான தீமைகள்
    அண்டாமல் தடுத்தீர்;
    கைம்மாறில்லாத நன்மைகள்
    கர்த்தாவே, பொழிந்தீர்.

    5. இம்மையில் என்றும் தாழ்மையாய்
    தெய்வன்பை நினைப்பேன்;
    மறுமையில் வணக்கமாய்
    உம்மையே போற்றுவேன்.

    6. புகழ்ச்சி, துதி, தோத்திரம்,
    ஒன்றான உமக்கே
    இகத்திலும் பரத்திலும்
    எழும்பத் தகுமே.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Neer Thandha Nanmai Yaviyaum / நீர் தந்த நன்மை யாவையும் - Tamil Christian Songs Lyrics Neer Thandha Nanmai Yaviyaum / நீர் தந்த நன்மை யாவையும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.