Paviki puzhalidam / பாவிக்குப் புகலிடம் இயேசு - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Paviki puzhalidam / பாவிக்குப் புகலிடம் இயேசு - Tamil Christian Songs Lyrics



    பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர்
    பாரினில் பலியாக மாண்டாரே (2)

    பரிசுத்தரே பாவமானரே
    பாரமான சிலுவை சுமந்தாரே

    - பாவிக்கு
    உலகத்தின் இரட்சகர் இயேசுவே
    உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார் (2)
    தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
    தளராமல் நம்பி ஒடிவா - (2)

    - பாவிக்கு
    பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
    பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில் (2)
    கண்டு நீ மனம் கலங்குவதேன்
    கர்த்தன் ஏசுவண்டை ஓடிவா - (2)

    - பாவிக்கு
    வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
    வாருங்கள் என்னண்டையில் என்கிறார் (2)
    இளைப்பnறுதல் தரும் இயேசுவை
    இன்று தேடி நாடி நம்பிவா - (2)

    - பாவிக்கு

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Paviki puzhalidam / பாவிக்குப் புகலிடம் இயேசு - Tamil Christian Songs Lyrics Paviki puzhalidam / பாவிக்குப் புகலிடம் இயேசு - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 18, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.