En Thedal Nee En Deivame - என் தேடல் நீ என் தெய்வமே - Christking - Lyrics

    En Thedal Nee En Deivame - என் தேடல் நீ என் தெய்வமே


    என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
    உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2

    இறைவா இறைவா வருவாய் இங்கே
    இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2

    ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
    நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
    பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
    உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
    இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
    மறைவாழ்விலே நிலையாகுவேன்
    வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா

    உன்னோடு நான் காணும் உறவானது
    உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
    பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
    எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
    உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
    உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
    வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா

    En thedal nee En Deivame
    Neeyinei en vaalvu Niram Maarude
    Unnai manam thedude Nee vali Kaattume

    Iraiva iraiva va‌ruvaai inge
    Idha‌ya‌m arugil ama‌rvaai inre

    Oru kodi vinmeenga‌l dina‌m thonrinum
    Neeyinri en vaalvu irul Soondhidum
    Pira‌r anbai en pa‌niyil naan Yerkaiyil

    Un anbu uyir tha‌ndu vaalvagidum
    Iraivaarththaiyil nirai‌vaguven
    Ma‌raivaalvile nilaiyaaguven
    Va‌lithedum enaik kaakka‌ nee vendume

    Unnodu naan kaanum ura‌vaana‌du
    Ulla‌ththai urumaatri una‌dhakkidum

    Pa‌liyaan unnai naanum dhina‌m Yerkkaiyil
    Eliyenil un vaalvu oliyaagidum
    Un meetta‌lal ennil maatra‌nga‌l
    Un theda‌laal enil aatrra‌lga‌l
    Va‌lithedum enaikakka‌ nee vendume

    En Thedal Nee En Deivame - என் தேடல் நீ என் தெய்வமே En Thedal Nee En Deivame - என் தேடல் நீ என் தெய்வமே Reviewed by Christchoir on March 19, 2015 Rating: 5
    Powered by Blogger.