Ratcha Perumana Paarum / ரட்சா பெருமானே பாரும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ratcha Perumana Paarum / ரட்சா பெருமானே பாரும் - Tamil Christian Songs Lyrics

    1. ரட்சா பெருமானே, பாரும்,
    புண்ணிய பாதம் அண்டினோம்
    சுத்தமாக்கி சீரைத் தாரும்,
    தேடிவந்து நிற்கிறோம்!
    இயேசு நாதா, இயேசு நாதா
    உந்தன் சொந்தமாயினோம்

    2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
    பாதுகாத்தும் வருவீர்;
    ஜீவ தண்ணீரண்டை என்றும்
    இளைப்பாறச் செய்குவீர்;
    இயேசு நாதா, இயேசு நாதா
    உந்தன் சொந்தமாயினோம்

    3. நீதி பாதை தவறாமல்
    நேசமாய் நடத்துவீர்;
    மோசம் பயமுமில்லாமல்
    தங்கச் செய்து தாங்குவீர்;
    இயேசு நாதா, இயேசு நாதா
    உந்தன் சொந்தமாயினோம்

    4. ஜீவ கால பரியந்தம்
    மேய்த்தும் காத்தும் வருவீர்;
    பின்பு மோட்ச பேரானந்தம்
    தந்து வாழச் செய்குவீர்;
    இயேசு நாதா, இயேசு நாதா
    உந்தன் சொந்தமாயினோம்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ratcha Perumana Paarum / ரட்சா பெருமானே பாரும் - Tamil Christian Songs Lyrics Ratcha Perumana Paarum / ரட்சா பெருமானே பாரும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.