Siluvaiyai Sumandhumai / சிலுவையை சுமந்தும்மை - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Siluvaiyai Sumandhumai / சிலுவையை சுமந்தும்மை - Tamil Christian Songs Lyrics


    சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
    இயேசுவே என்னையும் அழைத்தீரே
    கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே
    நல்லதோர் வழியை வகுத்தீரே

    முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்
    உந்தனின் திருப்பாதத்தில்
    ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே
    உம் சித்தம் நிறைவேற்றிடும்

    1. நேசரே உம் அடிச் சுவடுகளை
    நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே
    இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற - நல்
    சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் - முற்றுமாய்

    2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே
    வேகமாய் உம் அண்டை வந்திடுவேன்
    ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை
    யுகயுகமாக சேவை செய்வேன் - முற்றுமாய்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Siluvaiyai Sumandhumai / சிலுவையை சுமந்தும்மை - Tamil Christian Songs Lyrics Siluvaiyai Sumandhumai / சிலுவையை சுமந்தும்மை - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.