Yellai manuuruvai / ஏழை மனு உருவை எடுத்த - Tamil Christian Songs Lyrics

    Yellai manuuruvai / ஏழை மனு உருவை எடுத்த - Tamil Christian Songs Lyrics



    ஏழை மனு உருவை எடுத்த
    ஏசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
    ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே - (2)

    கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
    கடும் முள்முடி பொன் சிரசில் சூடிட
    கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
    சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
    கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – (2)

                                                                                       - ஏழை மனு
    அவர் தலையையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
    அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
    ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
    அருமை ரட்சகர் தொங்கினார் தனியே
    அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே - (2)

                                                                                      - ஏழை மனு
    அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
    அவர் ரத்தத்தால் பாவ கறைகள் நீங்க
    உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
    நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
    சிலுவையில் ஜெயித்தார் யாவையும் - (2)

                                                                                      - ஏழை மனு

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yellai manuuruvai / ஏழை மனு உருவை எடுத்த - Tamil Christian Songs Lyrics Yellai manuuruvai / ஏழை மனு உருவை எடுத்த - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.