Yesu Yengal Meypar / இயேசு எங்கள் மேய்ப்பர் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Yesu Yengal Meypar / இயேசு எங்கள் மேய்ப்பர் - Tamil Christian Songs Lyrics


    1. இயேசு எங்கள் மேய்ப்பர்
    கண்ணீர் துடைப்பார்;
    மார்பில் சேர்த்தணைத்து
    பயம் நீக்குவார்;
    துன்பம் நேரிட்டாலும் ,
    இன்பம் ஆயினும் ,
    இயேசுவின்பின் செல்வோம்
    பாலர் யாவரும்.

    2. நல்ல மேய்ப்பர் சத்தம்
    நன்றாய் அறியோம்;
    காதுக்கின்பமாக
    கேட்டுக் களிப்போம்;
    கண்டித்தாலும் , நேசர்
    ஆற்றித் தேற்றூவார்;
    நாங்கள் பின்னே செல்ல
    வழி காட்டுவார்.

    3. ஆட்டுக்காக மேய்ப்பர்
    ரத்தம் சிந்தினார்;
    அதில் மூழ்கினாரே
    தூயர் ஆகுவார்;
    பாவ குணம் நீக்கி
    முற்றும் ரட்சிப்பார் ,
    திவ்விய தூய சாயல்
    ஆக மற்றுவார்.

    4. இயேசு நல்ல மேய்ப்பர்
    ஆட்டைப் போஷிப்பார்;
    ஓனாய்கள் வந்தாலும் ,
    தொடவே ஒட்டார்;
    சாவின் பள்ளத்தாக்கில்
    அஞ்சவே மாட்டோம்;
    பாதாளத்தின்மேலும்
    ஜெயங்கொள்ளுவோம்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yesu Yengal Meypar / இயேசு எங்கள் மேய்ப்பர் - Tamil Christian Songs Lyrics Yesu Yengal Meypar / இயேசு எங்கள் மேய்ப்பர் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.