Arasanai Kanamal Irupano /அரசனைக் காணாமலிருப்போமா? - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

    Arasanai Kanamal Irupano /அரசனைக் காணாமலிருப்போமா? - Tamil Christmas Songs Lyrics



    பல்லவி

    அரசனைக் காணமலிருப்போமோ? - நமது
    ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

    அனுபல்லவி

     பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? - யூதர்
    பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத

    சரணங்கள்

    1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
    ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
    ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
    தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! - யூத --- அரசனை

    2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! - மேற்குத்
    திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
    பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
    பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! - யூத --- அரசனை

    3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன்
    அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
    இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம்
    எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! - யூத --- அரசனை

    4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை
    அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
    மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்
    வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! - யூத --- அரசனை

    5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்
    பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
    வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ
    வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
    Arasanai Kanamal Irupano /அரசனைக் காணாமலிருப்போமா? - Tamil Christmas Songs Lyrics Arasanai Kanamal Irupano /அரசனைக் காணாமலிருப்போமா? - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.