Thaai Marandhalum / தாய் மறந்தாலும் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Thaai Marandhalum / தாய் மறந்தாலும் - Tamil Christian Songs Lyrics



    பல்லவி

    நான் உம்மை மறந்தாலும் - நீர்
    என்னை மறப்பதில்லை
    என் நேசர் இயேசுவே நீர் 
    எனக்கு போதுமே

    சரணங்கள்

    1. தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
    தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
    உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
    உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் --- நான்

    2. பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
    தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
    வேத வசனமே என் பாதைக்கு தீபமே
    முடிவு பரியந்தம் வழி நடத்துமே --- நான்

    3. உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
    உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
    உந்தன் கிருபையே எனக்கு போதுமே
    என்னை என்றுமே நடத்திச் செல்லவே --- நான்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Thaai Marandhalum / தாய் மறந்தாலும் - Tamil Christian Songs Lyrics Thaai Marandhalum / தாய் மறந்தாலும் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 03, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.