Aathium neerae anthamum | ஆதியும் நீரே அந்தமும் நீரே - Lyrics

ஆதியும் நீரே அந்தமும் நீரே
மாறிடா நேசர் துதி உமக்கே
தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து
எந்நாளும் துதித்திடுவோம்
தூதர்கள் போற்றும் தூயவரே
துதிகளின் பாத்திரர் தேவரீரே
உந்தனின் சமூகம் ஆனந்தமே
உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்
வல்லமை ஞானம் மிகுந்தவரே
வையகம் அனைத்தையும் காப்பவரே
ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்
ஆண்டவர் இயேசுவின் மகிழ்ந்திடுவோம்
செய்கையில் மகத்துவம் உடையவரே
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே
பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்
ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்
ஆவியில் நிறைந்தே கலத்திடுவோம்
உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே
உத்தம தேவனை பணிந்திடுவோம்
ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்
பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்
மகிமையும் கனமும் துதிகளையே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Aathium neerae anthamum | ஆதியும் நீரே அந்தமும் நீரே - Lyrics
Reviewed by Christchoir
on
July 24, 2015
Rating:

No comments: