Vaan puzhgal valla | வான்புகழ் வல்ல தேவனையே நித்தம் - Lyrics

வான்புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே
யாக்கோபின் ஏணியில் முன் நின்றவர் தாம்
யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே
பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
கர்த்தன் தம் சேனை கொண்டு காத்திடுவாரே
உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
சுற்றி உலாவின நித்திய தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தன் தாசரைக் காத்திடுவாரே
சிறைச்சாலை கதவுகள் அதிர்ந்து நொறுங்க
சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே
அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எமை
தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
வழுவவிடாமலே காத்திடும் தேவன்
மாசற்றோராய் தம் முன் நிறுத்திடுவாரே
மகத்துவ தேவன் ஆனில் ஆயத்தமாக
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
மணவாளன் வரும் வேளை அறியலாகாதே
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர்
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Vaan puzhgal valla | வான்புகழ் வல்ல தேவனையே நித்தம் - Lyrics
Reviewed by Christchoir
on
July 24, 2015
Rating:

No comments: