Vaan purave engal | வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் - Lyrics - Christking - Lyrics

    Vaan purave engal | வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் - Lyrics



    வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
    வன் செட்டைகள் விரித்தே
    எம் அச்சமெல்லாம் அகல
    வன் செயலாய் வந்திறங்கிடும் எம்மில்

    ஆவியின் அக்கினியால் தரிசித்திட
    அனலுள்ள இருதயம் அளித்திடவே
    அன்பினால் அனைத்தோடும் கனலடைய
    அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே

    ஊற்றிடுமே உமதாவியை
    மாற்றிடுமே உம்மைப் போலவே

    சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
    மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய
    ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
    அண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே

    பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
    அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க
    நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்
    பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர்

    நேசரே நினைத்திடா வேளை வருவீர்
    சேர்த்திட தூயவரை உமதுடனே
    வேளையும் காலமும் சாயுமுன்னே
    வேளையிது தீர கனிந்திறங்கிடுமே





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
    Vaan purave engal | வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் - Lyrics Vaan purave engal | வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.